எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, படகை பறிமுதல் செய்ததோடு மட்டுமில்லாமல், மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையிலடைத்துள்ளனர் இலங்கை கடற்படையினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/222_4.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டணத்தை சேர்ந்த 14 மீனவர்கள், மூன்று படகுகளில் சனிக்கிழமையன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்துள்ளதாக இவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், மூன்று படகுகளையும் பறிமுதல் செய்து, மீனவர்களிடம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/111_44.jpg)
பின்னர் அவர்களை ஞாயிறன்று காலை யாழ் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து மீனவர்கள் 14 பேர் மீதும் எவ்வித ஆவணமும் இன்றி இலங்கை கடல் பகுதிக்குள் வந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்த ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் மீனவர்களை அடைக்க உத்தரவிட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)