வ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். நேற்று திருப்பதி சென்ற முதல்வர் இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Advertisment

இன்று காலையில் முதல்வருடன் திருப்பதி கோயிலுக்கு வந்திருந்த முதல்வரின் செயலாளர் ஸ்ரீதரனுக்கு திடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஸ்ரீதரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக உயர் சிகிச்சை அளிக்கும்படி கூறியதால், திருப்பதியில் இருந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட ஸ்ரீதரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முதல்வரிடம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், வேலூர் சிம்சி மருத்துவமனைக்கு விரைகிறார் முதல்வர் பழனிச்சாமி.

Advertisment