Skip to main content

கொலைமிரட்டல் - சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மீது வழக்குப்பதிவு

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

 

வனக்காவலர்களை மிரட்டியதாக சேலம் திமுக எம்.பி.  எஸ்.ஆர்.பார்த்திபன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.  வேடன்கரடு மலைப்பகுதிக்கு கள தணிக்கைக்கு சென்ற வனக்காவலர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக வனச்சரக அலுவலர் திருமுருகன் தந்த புகாரின் பேரில் பார்த்திபன் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது சாலை அமைக்க மரங்களை வெட்டியது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

s

 

இந்நிலையில், அவப்பெயர் ஏற்படுத்தவே வழக்குபதிவு செய்துள்ளதாக எஸ்.ஆர். பார்த்திபன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.    

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுங்கக் கட்டணம் வசூல் குறித்து மத்திய அமைச்சர் தகவல் 

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Union Minister information on customs duty collection

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் சுங்கச் சாவடிகள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிப்பது குறித்தும், சாலை கட்டணம் வசூலிப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளிக்கையில், “இந்தியா முழுவதும் உள்ள 950க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 2,21,585.46 கோடி வசூலாகியுள்ளது. கடந்த 2015 - 16 ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான 8 ஆண்டுகளில் ரூ. 2,27,963.25 கோடி சாலை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 - 16 ஆம் ஆண்டில் ரூ. 17,759.12 கோடியாக இருந்த சாலை சுங்கக் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. அதன்படி, 2016 - 17 ஆம் ஆண்டில் ரூ. 18,511.69 கோடி வசூலாகியுள்ளது. 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 22,664.50 கோடி வசூலாகியுள்ளது. 2018 - 19 ஆம் ஆண்டில் ரூ. 25,145.19 கோடி வசூலாகியுள்ளது. 2021 - 22 ஆம் ஆண்டில் ரூ. 33, 907.71 கோடியாக இருந்த சுங்கக் கட்டண வசூல் தொகை 2022 - 23 ஆம் ஆண்டில் ரூ. 48,028. 19 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கடந்த 8 மாதங்களில் நாடு முழுவதும் வசூலான மொத்த சுங்கக் கட்டணத் தொகை  ரூ. 36,377.79 கோடியாகும்.

அதேபோன்று தமிழகத்தில் உள்ள 65 சுங்கச் சாவடிகளிலும் தொடர்ந்து சுங்கக் கட்டண வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2020 - 21 ஆம் ஆண்டில் ரூ. 2,332. 78 கோடியாக இருந்த சுங்கக் கட்டணம் வசூல் கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் ரூ. 2,695.77 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2022 - 23 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 65 சுங்கச்சாவடிகளில் ரூ. 3, 817.48 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. 2020- 21 முதல் 2022-23 வரையிலான 3 ஆண்டுகளில்  தமிழகத்தில் மொத்தம் ரூ.8,846 கோடி சுங்கக் கட்டணம் வசூலாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன், 1 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரவீணா, சேலம் எம்.பி பார்த்திபனின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

salem  dmk mp parthiban case chennai high court judgement

அதில், வேட்புமனுவுடன் தாக்கல் செய்த படிவம் 26-ல் வேட்பாளர்கள், குற்ற விபரங்கள், சொத்து உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிக்க வேண்டும். இந்த விபரங்களை முறையாகச் சமர்ப்பிக்காத பார்த்திபனின் வேட்பு மனுவைத் தேர்தல் அதிகாரி ஏற்றுக்  கொண்டது சட்டவிரோதமானது.  பார்த்திபன் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்.  மீண்டும் சேலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

salem  dmk mp parthiban case chennai high court judgement

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தபோது, பார்த்திபன் தரப்பில்,  தி.மு.க மக்களவை உறுப்பினரைத் துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், தொடர்ந்து விசாரணையைத் தள்ளிவைக்கக் கோருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் மனுதாரரின் இந்தச் செயல் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளுக்கு முரணானது என்பதால் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
 

இதை ஏற்றுக் கொண்ட நீநிபதி பி.டி. ஆஷா, தி.மு.க,  எம்.பி.பார்த்திபனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.