Squeezed ballot paper ... Tension in thalaingyaru

மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிவரும் நிலையில், நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் வாக்குச் சீட்டு தூக்கி வீசப்பட்டதால்அங்கு மறுவாக்குப்பதிவுநடைபெற்றது.முன்னதாக நடைபெற்ற மறைமுக வாக்குப்பதிவில்அதிமுகபெண் வேட்பாளரின்வாக்குச் சீட்டை திமுக உறுப்பினர் கசக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் மறு தேர்தல் நடத்த தேர்தல் அலுவலர் உத்தரவிட்டார்.

Advertisment

ஆனால் மறுவாக்குப்பதிவைதிமுகவைச் சேர்ந்த 7 கவுன்சிலர்கள் புறக்கணித்த நிலையில் 8 அதிமுக கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதனால் மறு வாக்குப்பதிவுசெல்லாது என அறிவிக்கக்கோரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர்தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment