SP's action, Police in excitement

Advertisment

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ப. மூர்த்தி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், மாவட்ட ஆயுதப்படை, எஸ்பி அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், பிறந்தநாள் மற்றும் திருமண நாளுக்கு ஆண், பெண் காவலர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில்,கடந்த 2 நாட்களாக பிறந்தநாள் மற்றும் திருமண நாளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதையடுத்து, குடும்பத்துடன் சந்தோஷமாக பிறந்தநாள் மற்றும் திருமண நாளைக் கொண்டாடும் காவலர்கள், அதனை உற்சாகமாக புகைப்படம் எடுத்து எஸ்பி மூர்த்திக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி நன்றியைத் தெரிவித்துவருகின்றனர்.