திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்ததிருமுருகன் பூண்டியில்விவேகானந்தாசேவாலயம்குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் தங்கிபள்ளிக்குசென்று படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அனைவருக்கும் உணவு தரப்பட்டுள்ளது. கெட்டுப்போன உணவை உண்ட சிறிது நேரத்தில் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் 10 முதல் 13 வயது வரை உள்ள மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உணவினால் கடுமையாகபாதிக்கப்பட்ட6 குழந்தைகள்சிகிச்சைக்காகதிருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்றுசெய்தியாளர்களைசந்தித்த மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “இப்பொதைக்கு எங்களுக்கு வந்த தகவலின் படி குழந்தைகள் வாந்தி எடுத்தவுடனே அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டதாகதெரிகிறது. 3 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாகமருத்துவர்கள் தெரிவித்தனர். 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணை முடிந்ததும் தவறு செய்தவர்கள் மேல் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.மருத்துவபரிசோதனைகளுக்குபின்பே உயிரிழப்புகளுக்கான காரணம் தெரியவரும். அரசுமருத்துவமனைகளில் இருந்துசோதனைகளுக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. இரவுகுழந்தைகளுக்குசாதம்கொடுத்ததாககூறுகின்றனர். சோதனை முடிவுகளில் அனைத்தும் தெரிந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.