Skip to main content

ஆன்மீகவாதி போல சென்று சிலைகளை திருடினேன்: சிலை கடத்தல்காரன் விளக்கம்

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

“தீவிர ஆன்மீகவாதிபோல பலநாள் வேடமிட்டு போவேன். பிறகு நிதானமாக ஸ்கெட்ச் போட்டு சிலைகளை கடத்தினேன்’’ என்கிறார் காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் 80 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய கோயில் சிலைகளை திருடி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கைதாகியிருக்கும் ஜெயக்குமார். 
 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் சிவன் கோயிலில் உள்ள சிவன், பார்வதியின் ஐம்பொன் சிலைகள் 2015ம் ஆண்டு கானாமல் போனது. அதேபோல் வேலூர் மாவட்டம் சவுந்தரியாபுர கேசவ பெருமாள் கோயிலில் உள்ள உற்சவர், ஷீதேவி, பூமிதேவி ஆகிய மூன்று சிலைகள் அதே 2015ம் ஆண்டு திருடுபோனது. அதே ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த பையூரில் உள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயிலில் உள்ள உற்சவர், ஷீதேவி, பூமாதேவி, சக்கரத்தாழ்வார் என நான்கு ஐம்பொண் சிலைகள் திருடுபோனது. மூன்று கோயில்களில் திருடுபோன சிலைகளின் மதிப்பு 80 கோடியை தாண்டும் என மதிப்பிட்டனர். 

 

As a spiritual person I went to the statues: explaining the idol of the idol


 

இந்தநிலையில் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த தனலிங்கம் என்பவரிடம் இந்த சிலைகள் இருப்பதாக கண்டுபிடித்து மீட்டனர். தனலிங்கத்தின் மீது வழங்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்ததில் 16 பேர் தொடர்பிருப்பதாக வழக்கு பதிவு செய்து 15 பேரை கைது செய்தனர். மீதமுள்ள ஒருவனான சென்னை புழல்பகுதியை சேர்ந்த காவாங்கரை ஜெயக்குமார் மட்டும் மூன்று ஆண்டுகள் போலிஸுக்கு டிமிக்கி கொடுத்துக்கொண்டு தப்பிவந்தான். ஜெயக்குமார் தமிழகத்தில் இல்லை வெளிமாநிலங்களில் சுற்றுவதாகவும் 20 ம் தேதி சென்னைக்கு வருவதாகவும் சிலை தடுப்பு பிரிவு போலிஸார் கண்டறிந்ததுடன், சென்னைக்கு அவன் வரும்போது பிடித்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
 

திருடியது எப்படி என்று போலிஸார் விசாரனையில் ஜெயக்குமார் கூறுகையில், “சாதாரண ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்தேன். அந்த தொழிலில் லாபம் பெருசாக இல்லை. 2015ம் ஆண்டு என்னுடைய நண்பர்களிடம் நான்கு நாள் ஆலோசனை செய்தேன். அவர்களையும் சேர்த்துக்கொண்டேன். அந்த டீமுக்கு நான் தலைவன். பகல் நேரத்தில் காவிவேட்டி கட்டிக்கொண்டு தீவிர ஆன்மீகவாதிபோல் பயபக்தியுடன் அங்குள்ள அர்ச்சகர்கள், பூசாரிகளிடம் பழகுவேன். பிறகு நட்பாக்கி கொள்வேன். அவர்கள் மூலமே விலை உயர்ந்த விக்கிரகங்கள் எங்குள்ளது என தெரிந்துகொள்வேன். அதை நன்பர்களோடு இரவு நேரங்களில் கடத்துவோம், திருடிய சிலைகளை சென்னையை சேர்ந்த தனலிங்கம் மூலம் விற்போம். அப்படி சில சிலைகளை விற்க சென்றபோது தான் அவர் மாட்டிக்கொண்டு எங்களையும் காட்டிக்கொடுத்துவிட்டார்.’’ என்றானாம் கூலாக.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.