Advertisment

மதுரை - துபாய்க்கு மீண்டும் விமான சேவை... தேதியை அறிவித்தது ஸ்பைஸ் ஜெட்!

SpiceJet announces Madurai-Dubai return flight date

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் கூடுதல் தளர்வுகளை வழங்குவது தொடர்பாக இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற இருக்கிறது.

Advertisment

இந்நிலையில், மதுரையில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவை துவங்குவது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவை தொடங்குகிறது என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனா இரண்டாம் அலை காரணமாக விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்ட நிலையில்,துபாய்க்கு மீண்டும் விமான சேவை தொடங்கயிருக்கிறது. செவ்வாய்க்கிழமை தவிர்த்து தினமும் காலை 11:40 மணிக்கு மதுரையில் இருந்து துபாய்க்கு விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

dubai madurai flight corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe