Advertisment

புதுச்சேரி சாலைகளில் செல்ல வேண்டிய வேகம்! போக்குவரத்து போலீசார் அறிவிப்பு!

புதுச்சேரியில் அதிகவேகத்தில் செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்க நவீன கருவி வாங்கப்பட்டு போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இதைத்தொடர்ந்து தற்போது எந்தெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்த அறிவிப்பினை போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் வெளியிட்டுள்ளார்.

Advertisment

road

இதன்படி புதுவை கடற்கரை சாலையில் வாகனங்கள் 20 கி.மீ வேகத்திலும்,எஸ்.வி.பட்டேல் சாலை, சுப்பையா சாலை, அண்ணாசாலை, அண்ணா சாலையில் இருந்து வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் கடற்கரை நோக்கி செல்லும் அனைத்து வீதிகளிலும் 30 கி.மீ வேகத்தில் செல்லலாம்.கடலூர் சாலையில் வெங்கடசுப்பாரெட்டியார் சிலை முதல் அரியாங்குப்பம் பாலம் வரை 30 கி.மீ. வேகத்திலும்,அங்கிருந்து முள்ளோடை எல்லைவரை 50 கி.மீ வேகத்திலும் செல்லலாம்.

இந்த சாலையில் குடியிருப்பு பகுதிகள், கல்வி நிறுவனங்கள், மார்க்கெட் தென்பட்டால் அப்பகுதியில் 30 கி.மீ வேகத்தில் செல்லவேண்டும்.

கடற்கரை சாலை முதல் ஆரியபாளையம் பாலம் வரை 30 கி.மீ வேகத்திலும்,அங்கிருந்து மதகடிப்பட்டு எல்லைவரை 50 கி.மீ வேகத்திலும் செல்லலாம்.இச்சாலையில் குடியிருப்பு, பள்ளி, மருத்துவமனை பகுதியில் 30 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும்.

காமராஜ் சாலை கோரிமேடு எல்லையில் இருந்து ராஜா தியேட்டர் சிக்னல் வரை 30 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும். ராஜீவ் காந்தி சிக்னலில் இருந்து அய்யங்குட்டிபாளையம் வரை 30 கி.மீ. வேகத்திலும், சுப்பையா சாலைதொடங்கி முத்தியால்பேட்டை மார்க்கெட் வரை உள்ள காந்தி வீதியில் 30 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.

முத்தியால்பேட்டை மார்க்கெட் முதல் கனகசெட்டிகுளம் வரை 50 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.இங்கு குடியிருப்பு, மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் குறுக்கிட்டால் அப்பகுதியில் 30 கி.மீ. வேகத்தில் செல்லவேண்டும் எனஅந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

traffic Road Road Safety Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe