speed car road persons incident police investigation

சாலையோரத்தில் நின்றவர்கள் மீது கார் மோதியசி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

Advertisment

ஈரோடு மாவட்டம், அப்பக்கூடல் பவானி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த கார், திடீரென சாலையோரத்தில் இருந்த இரண்டு பேர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இரண்டு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அத்துடன், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.