தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலையில் உலக திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இந்த விழாவில் பலர் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த படத்தின் முதல் படமாக திரையிடப்பட்ட மலையாளத்தின் கும்பலாங்கி நைட்ஸ் படம் திரையிடப்பட்டது.

Advertisment

asuran in tiruvannamalai

அந்த படத்தை பற்றி முன்னுரை தந்தார் திரைத்துறை பேராசிரியர் சிவக்குமார். அவர் பேசும்போது, "ஒருநாள் இரவு 10.50க்கு தான் கும்பலாங்கி நைட்ஸ் படத்தினை ஒரு பத்து நிமிடம் பார்க்கலாம் என அமர்ந்தேன். ஆனால் முழு படம் பார்த்த பின்பே எழுந்தேன். அந்த படம் என்னை உள் இழுத்துக்கொண்டது. அந்த படத்தின் இயக்குநரை அழைத்து தொடங்க விழாவில் பேச வைக்கலாம் என நினைத்திருந்தோம். முடியவில்லை. சிறந்த படம்" என்றார்.

Advertisment

இவைகளுக்கு முன்பாக பேசும்போது, "இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தின் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள அசுரன் படத்தை பார்த்தேன், பார்த்தபோது மிக வேதனையாக இருந்தது. அடி தடியை மையமாக வைத்து அந்த படத்தை எடுத்துள்ளார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை படம்மாக்கஇது வழியல்ல, இதை விட சிறப்பாக எடுத்திருக்கலாம்" என பேசினார்.

படம் பார்த்தவர்கள் மற்றும் விமர்சகர்களால் படம் பாராட்டப்பட்டு வரும் நிலையில் திரைப்பட பேராசிரியர் ஒருவர் நேர் எதிரான கருத்தை தெரிவித்துயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment