Advertisment

'ஆனைப்புளி பெருக்க மரத்தின் சிறப்பு' - கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர்!

 'The specialty of the Anaippuli multiplication tree' - Chief Minister unveiled the inscription!

Advertisment

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனைப்புளி பெருக்க மரத்தின் சிறப்புகள் தாங்கிய கல்வெட்டினை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கிவைத்தார்.

கல்வெட்டை திறந்துவைத்ததோடு பழமைவாய்ந்த ஆனைப்புளி பெருக்க மரத்தினையும்முதல்வர் பார்வையிட்டார். அவர் திறந்துவைத்த கல்வெட்டில்அம்மரத்தின் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த ஆனைப்புளி பெருக்க மரம் உலகின் பழமையான மரங்களில் ஒன்று. பொந்தன்புளிஎன்றும் அழைக்கப்படும் இம்மரம்அதிகநூற்றாண்டுகள்வாழக்கூடியது. இந்தக் கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியில், சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ மையத்தையும் திறந்துவைத்தார்முதல்வர்.

அதன்பின் விழா மேடையில் பேசிய முதல்வர், ''அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் தாயாகதிமுக அரசு செயல்படும். அனைவருக்கும் செவிமடுக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டுவருகிறது. தமிழக அரசின் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்திற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது'' என்றார்.

tree TNGovernment mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe