Advertisment

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் சிறப்பு வழிபாடு..! 

Special worship for men only ..!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் செங்கமலையார் சுவாமி கோயிலில் மழை வேண்டி கிடாவெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Advertisment

நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள செங்கமலையார் சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டி, ஆண்கள் மட்டுமே பங்கேற்று, கிடா வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

Advertisment

Special worship for men only ..!

அதன்படி, அப்பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயிலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள் கிடா மற்றும் பூஜை பொருட்களுடன் வந்து வணங்கி, ஊர்வலமாக காட்டுப் பகுதியில் உள்ள செங்கமலையார் சுவாமி கோயிலுக்கு எடுத்துச் சென்றனர்.பின்னர் கிடா வெட்டிபொங்கல் வைத்தும், செங்கமலையார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும்மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதில் பங்கேற்ற ஆண்கள் அனைவருக்கும் கிடா விருந்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் ஈச்சங்காடு, நாட்டார்மங்கலம் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Perambalur temple
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe