Special Vande Bharat train operation between Chennai - Tirunelveli

Advertisment

சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே நவம்பர் 9, 16 மற்றும் 23 ஆம் தேதிகளில் சிறப்புக் கட்டணரயில்கள் இயக்கப்பட உள்ளன. திருநெல்வேலியில் மாலை 06.45 மணிக்கு புறப்படும் சிறப்புப் கட்டண ரயில் மறுநாள காலை 08.35 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

அதே போன்று சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே நவம்பர் 10, 17 மற்றும் 24 ஆம் தேதிகளில் சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் பிற்பகல் 03.00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 07.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மேலும் சென்னை - திருநெல்வேலி, திருநெல்வேலி - சென்னை இடையே நவம்பர் 9 ஆம் தேதி சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.