திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

Special Trains to Thiruvannamalai-Southern Railway Notification

திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையின் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலைக்குடிசம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவித்திருந்தார்.

அதிநவீன சொகுசு பேருந்துகள், படுக்கை வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்குச் செல்வார்கள் www.tnstc.in அல்லது tnstc app மூலம் முன்பதிவு செய்தும் அரசுப் பேருந்துகளில் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் டிசம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கார்த்திகை தீபத்திற்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பர் 6, 7 ஆகி தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

railway thiruvannamalai
இதையும் படியுங்கள்
Subscribe