Special trains to avoid festive rush!

Advertisment

பண்டிகை காலக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, கர்நாடகாவில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. யஷ்வந்த்பூர்- நெல்லை, மைசூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் யஷ்வந்த்பூர், நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். இன்றும், நாளையும் மைசூர், தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.