The special train came to Chennai with more than a thousand people

Advertisment

டெல்லியில் இருந்து சிறப்பு ரயிலில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் சென்னை வந்தனர். டெல்லியில் இருந்து வந்தவர்கள் முகாம்கள் மற்றும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்குநாளை கரோனாபரிசோதனை நடத்தப்படவுள்ளது.

ஏற்கனவே இன்று மாலை செய்தியாளர்களைசந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னைக்கு இன்று இரவு ரயிலில் வருவோரை பரிசோதிக்க 400 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது அரசு சார்பில்,தங்கும் விடுதியில் தங்குபவர்கள் மற்றும்பணம் வசதி படைத்தவர்கள், நட்சத்திர ஓட்டல்களில் தங்குபவர்கள்எனவும் பிரிக்கப்பட்டுஅவரவர்கள்தங்கும் இடத்திற்கும் அழைத்து செல்லும்பணிகள் நடைபெற்று வருகிறது.நாளை காலை இவர்களுக்கு கரோனாபரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது.