சென்னையில் கரோனாபாதிப்பு கட்டுக்குள் வராத நிலையில், மே2 ஆம்தேதி இது தொடர்பாக ஆலோசிக்க தமிழக அமைச்சரவை கூட இருப்பதாகஅரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 15 மண்டலங்களில் பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்பு குழுக்கள்அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். கண்டைன்மெண்ட் ஷோனில் உள்ள வீடுகளுக்குமாஸ்க்,சனிடைசர்,250 கிராம் கிருமிநாசினி பவுடர் போன்றவை வழங்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கப்படுவது உறுதிசெய்யப்படும்.விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஏழைகள் தங்களைதனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லை எனில் அரசின் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்படும்.சென்னையில் நடமாடும் கரோனாபரிசோதனை வாகனங்கள் எண்ணிக்கை 3-லிருந்து 10 ஆக அதிகரிக்கப்படும். நோய் தடுப்பு பகுதிகளில் போதிய கழிவறை வசதிகள் இல்லையெனில், நடமாடும்கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும். வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த தொழிலை தொடங்கலாம் என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம், மதுரை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் எனக்கூறியுள்ளார்.