/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/65_104.jpg)
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கீழ்தளத்தில் இயங்கி வரும் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் ( SJHR) தெருவில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கவிதா. இவர் 1997 ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாவட்ட காவல் அலுவலகத்தில் பல பிரிவுகளில் மாறி மாறி வேலை பார்த்து வந்தவர், கடந்த மூன்று வருடங்களாக SJHR பிரிவில் நிலைய எழுத்தர் ஆக பணி புரிந்து வந்துள்ளார்.
சமூக நீதிப் பிரிவின் முக்கியமான வேலை எஸ்.சி - எஸ்.டி. வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலமாக வாங்கிக் கொடுப்பது, பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, பொதுமக்களுக்கு சமூக நீதி சம்பந்தமான விழிப்புணர்வு நடத்துவது பின்றவையாகும்.
சிறிய அளவில் விழிப்புணர்வு நடத்துவதற்கு சாமியான பந்தல், சேர், டீ காபி ஆகியவற்றை ஏற்பாடுகள் செய்வதற்கு அரசால் ஒரு கூட்டத்துக்கு 2500/ ரூபாய் வரையிலும் பெரிய அளவில் விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்கு (Mass Awareness ) அரசாங்கத்தால் 64,000/- ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு கூட்டம் நடத்தினோம் என போலி பில்கள் தயாரித்து அதை அரசுக்கு பரிந்துரை அனுப்பிக் கடந்த மூன்று வருடங்களில் 300 விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டதாக ( 300*2500=7,50,000) அரசாங்கத்தை ஏமாற்றி பணம் பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் பெரிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டதாக (6*64000=384000) தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/64_89.jpg)
இதில் குறிப்பிடத்தக்க ஒன்று விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாமலேயே கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டு போலி பில்கள் தயாரித்து அதை அரசுக்கு அனுப்பி அதற்கான தொகையையும் பெற்றுக் கையாடல் செய்துள்ளனர். மேலும் கவிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள் கூட இதற்கு முன்பு வந்த பிறகும் கூட தொடர்ந்து அதே இடத்திலேயே பணி புரிந்து வந்துள்ளார். தற்போது இந்த விஷயம் வடக்கு மண்டல ஐஜி ஆஷ்ரா கர்க்கின் கவனத்திற்கு சென்றபின் அவரது அதிரடி உத்தரவால் தற்போது வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்மீது விசாரணை நடத்தவேண்டும் என வடக்கு மண்டல தலைவருக்கு புகார் அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர்.
இதுகுறித்து எஸ்.பி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, கடந்த 20 ஆண்டுகள் அவர் இங்கேயே பணியாற்றியது உண்மைதான். அதற்காக ஆண்டுக்கு 100 கூட்டங்கள் நடத்தியதாகவும் அதில் ஊழல் செய்ததாக சொல்வது எல்லாம் ஏற்புடையதாக இல்லை. அவர்கள் குறிப்பிடும் தொகை அதிகம். காரணம், அவ்வளவு தொகை எல்லாம் அந்த பிரிவுக்கு காவல்துறையில் வழங்குவது இல்லை. அப்படி நடந்திருந்தாலும் அதில் சம்மந்தப்பட்ட பிரிவின் உயர் அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கும் என்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)