Skip to main content

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையில் சிறப்பு அமர்வு

Published on 21/07/2018 | Edited on 27/08/2018
maga

 

சிலை கடத்தல் தொடர்பாக 2017 ஜுலைக்கு பிறகு தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையில் சிறப்பு அமர்வை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.

 

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள உற்சவர் சிலை மற்றும் மூலவர் சிலைகள் சேதம் அடைந்துள்ளது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் ஆஜராகி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் களவு போயிருப்பதாகவும், கோயிலில் உள்ள பலங்கால கதவுகள் மற்றும் பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், அதைபோல் கோயில் உள்ள உற்சவர் மற்றும் மூலவர் சிலைகளை மாற்றி போலியான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 

 

அதே போல கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதியிலிருந்து 3 நாட்களுக்கு பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்க படவில்லை என்றும், இதற்கு முறையான விளக்கத்தை கோயில் நிர்வாகம் அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நீதிபதியிடம் தெரிவித்தார். 

 

கோவிலின் தரப்பில் அறநிலையத்துறை இணை ஆணையர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் பராசரன், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள்  தவறானது, இதுதொடர்பாக ஏற்கனவே காவல்துறை விசாரணை மேற்கொண்டு இந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லையென புகாரை முடித்து வைத்துள்ளதாகவும், தினமும் செய்திகளில் வரவேண்டும் என்பதற்காக இதுபோல செயல் படுவதாகவும் தெரிவித்தார்.

 

இதனிடையில் நீதிபதி மகாதேவன் குறுக்கிட்டு, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை ஏற்படுத்தி  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளதாகவும், அதனபடி தானும்,  ஆதிகேசவலு-வும் இணைந்து இந்த வழக்குகளை ஜூலை 25ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

 

அதன்படி, சிலை கடத்தல் தொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25 வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவு பிறப்பித்த பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகள் சிறப்பு அமர்வில் பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ரயிலில் துப்பாக்கியைத் தவறவிட்ட முன்னாள் ஐ.ஜி.!

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

Former police IG on train erode district

 

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்து ஓய்வுபெற்ற பொன்.மாணிக்கவேல் தோட்டாக்கள் நிரம்பிய தனது கைத்துப்பாக்கியை ரயிலில் தவறவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

ஈரோடு மாவட்டம், காளைமாடு சிலை அருகே ஒரு நிகழ்ச்சிக்கு பொன்.மாணிக்கவேல் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக, ஏற்காடு விரைவு ரயில் மூலம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு சென்று சேர்ந்தார். சிறிது நேரத்திலேயே தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த எட்டு தோட்டாக்கள் நிரம்பிய கைத்துப்பாக்கியைக் காணவில்லை என ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

 

இதையடுத்து, காவல்துறையினர் அவர் பயணம் செய்த ரயிலின் பெட்டியை சோதனை செய்தனர். அப்போது, அவர் அமர்ந்திருந்த இருக்கையிலேயே, அவரது கைத்துப்பாக்கிக் கண்டுபிடிக்கப்பட்டது. 

 

தோட்டாக்கள் நிரப்பப்பட்டத் துப்பாக்கியை கவனக்குறைவாக, அவர் தனது இருக்கையிலேயே விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, பொன்.மாணிக்கவேலின் துப்பாக்கி, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 

Next Story

37 ஆண்டுகளுக்குபின் அர்ச்சனை..! ஆஸ்திரேலியா சென்று திரும்பிய நடராஜர்..! (படங்கள்)

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

 

கடந்த 1982ம் ஆண்டு தமிழக கோவிலில் இருந்து ஐம்பொன் நடராஜர் சிலை திருடப்பட்டது. இந்த சிலையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதன்பின் பொன் மானிக்கவேல் தலைமையிலான குழு அந்த சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பதை கண்டுபிடித்து, அதை மீட்டு இந்தியா கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் டெல்லியிலிருந்து இன்று காலை சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த நடராஜர் சிலைக்கு 37 ஆண்டுகளுக்கு பின் முதன்முதலாக மாலை அணிவித்து அர்ச்சனை செய்யப்பட்டது.