Advertisment

எம்.எல்.ஏ மகன் திருமணத்திற்கு வந்த துணைமுதல்வருக்கு திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜை!!

பூம்புகார் அதிமுக எம்.எல்.ஏ பவுன்ராஜின் இளைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பண்ணீர் செல்வமும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் திருக்கடையூர் அமிர்தகடேஷ்வார் கோவிலில் சாமிதரிசனம் செய்தார் பண்ணீர் செல்வம்.

Advertisment

நாகை மாவட்டம் திருக்கடையூரில், பூம்புகார் எம்,எல்.ஏ பவுன்ராஜின் மகனுக்கு நாளை 30. ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் பண்ணீர் செல்வமும் நடத்தி வைப்பதாக மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்திருந்தார்.

ops

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

ஆனால் பல்வேறு வேலைகளை காரனம் காட்டி இன்று வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சென்னையில் இருந்து கார் மூலம் சிதம்பரம் வழியாக திருக்கடையூருக்கு வந்து விட்டார். துணை முதல்வர் பண்ணீர் செல்வமோ இரயில் மூலம் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்தவரை கார் மூலம் திருக்கடையூர் கோவில் அருகே உள்ள தனியார் விடுதிக்கு வந்தார்.

பிறகு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவிற்கு பூஜை செய்த கணேஷ் குருக்கல் தலைமையில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது, முதலில் யானைக்கு பூஜை செய்தார், பிறகு பசுவிற்கும் கன்றுக்கும் பூஜை செய்துவிட்டு கோவிலை சுற்றிவந்து சாமி தரிசனம் செய்துவிட்டு திருமண மேடைக்கு சென்றார்.

அங்கு கார் மூலம் வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமியும் அமைச்சர்களும், ஒ,பண்ணீர் செல்வமும் மணமக்களுக்கு பூகொத்து கொடுத்து வாழ்த்துக்கூறிவிட்டு புறப்பட்டனர். முதல்வரும், துணை முதல்வரும் வருகை தந்ததால் நாகை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அதிகாரிகளும், காவல்துறையினரும் குவிந்திருந்தனர்.

marriage ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe