Skip to main content

எம்.எல்.ஏ மகன் திருமணத்திற்கு வந்த துணைமுதல்வருக்கு திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜை!!

Published on 29/08/2018 | Edited on 29/08/2018

பூம்புகார் அதிமுக எம்.எல்.ஏ பவுன்ராஜின் இளைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பண்ணீர் செல்வமும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் திருக்கடையூர் அமிர்தகடேஷ்வார் கோவிலில் சாமிதரிசனம் செய்தார் பண்ணீர் செல்வம்.

 

நாகை மாவட்டம் திருக்கடையூரில், பூம்புகார் எம்,எல்.ஏ பவுன்ராஜின் மகனுக்கு நாளை 30. ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.  திருமணத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் பண்ணீர் செல்வமும் நடத்தி வைப்பதாக மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்திருந்தார்.

 

ops

 

 

 

ஆனால் பல்வேறு வேலைகளை காரனம் காட்டி இன்று வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சென்னையில் இருந்து கார் மூலம் சிதம்பரம் வழியாக திருக்கடையூருக்கு வந்து விட்டார். துணை முதல்வர் பண்ணீர் செல்வமோ இரயில் மூலம் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்தவரை கார் மூலம் திருக்கடையூர் கோவில் அருகே உள்ள தனியார் விடுதிக்கு வந்தார்.

 

பிறகு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவிற்கு பூஜை செய்த கணேஷ் குருக்கல்   தலைமையில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது, முதலில் யானைக்கு பூஜை செய்தார், பிறகு பசுவிற்கும் கன்றுக்கும் பூஜை செய்துவிட்டு கோவிலை சுற்றிவந்து சாமி தரிசனம் செய்துவிட்டு திருமண மேடைக்கு சென்றார். 

 

அங்கு கார் மூலம் வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமியும் அமைச்சர்களும், ஒ,பண்ணீர் செல்வமும் மணமக்களுக்கு பூகொத்து கொடுத்து வாழ்த்துக்கூறிவிட்டு புறப்பட்டனர். முதல்வரும், துணை முதல்வரும் வருகை தந்ததால் நாகை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அதிகாரிகளும், காவல்துறையினரும் குவிந்திருந்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.