ரமலான் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக இஸ்லாமியர்கள் இரவு முதல் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையைமுன்னிட்டு திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர்.