உயிரிழந்த பின்பும் உலகத்தைப் பார்க்கும் மாற்றுத்திறனாளி

special person who donated eye after passed away

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் குமார். இவர் நக்கீரன் ஏஜண்ட், மற்றும்நியூஸ் பேப்பர் ஏஜெண்டாக இருந்து வந்தார். மாற்றுத்திறனாளியான குமார் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தனது கண்ணைதானம் செய்ய போவதாக உளுந்தூர்பேட்டை அரிமா சங்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை குமார் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இது குறித்து குமார் மனைவி கனகவல்லி உளுந்தூர்பேட்டை அரிமா சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் குமார் உடல் நல்லடக்கம் செய்வதற்கு முன்பாக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினருக்கு தகவல் அளித்தனர்.

special person who donated eye after passed away

அதன் படி குமாரின் வீட்டிற்கு வந்த மருத்துவ குழுவினர் அவரது கண்களை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்தனர். எடுக்கப்பட்ட கண்களை குமார் மனைவி மற்றும் அவர்களது உறவினர்கள் முன்னிலையில் மருத்துவ குழுவினர் பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்வில் அரிமா ஆளுநர் அசோக்குமார் மற்றும் குமாரின் உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறந்த பின்னும் தன் கண்கள் மூலம் உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார் நியூஸ் பேப்பர் ஏஜென்ட் குமார்.

kallakurichi
இதையும் படியுங்கள்
Subscribe