Advertisment

ஒரு வழக்கை கையில் வாங்கியவர் 250 நாட்கள் பணிக்கு வரவில்லை மனஉளைச்சல் அவருக்கா? எங்களுக்கா?- பொன்மாணிக்கவேல் கேள்வி!!

கடந்த 400 நாட்களில் என் மீது குற்றம்சாட்டிய 21 பேரில் ஒருவர் கூடஒரு எப்.ஐ.ஆர் கூட போடவில்லை என சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் கூறியுள்ளார்.

Advertisment

விசாரணை அதிகாரியை சுதந்திரமாக விசாரணை நடத்த விடாமல் தன் விருப்பப்படியே விசாரணை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் பொன்.மாணிக்கவேல் உத்தரவிடுகிறார். தன் விருப்பப்படி மட்டுமே வழக்கு நடைபெற வேண்டும் என்றும் ஆதாரம் இல்லாத போது கூட கைது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.அவரால் எங்களுக்கு மனா உளைச்சல் ஏற்பட்டுள்ளது எனபொன்மாணிக்கவேல் மீது நேற்று 13 பேர்டிஜிபி அலுவலகத்தில்புகார் அளித்திருந்த நிலையில் மேலும் 11 பேர் இன்று அதே மாதிரியான புகாரை பொன்மாணிக்கவேல் மீதுடிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

pon

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன்மாணிக்கவேல் அவர்கள்,

கடந்த 400 நாட்களில் என் மீது குற்றம்சாட்டிய 21 பேரில் ஒருவர் கூடஒரு எப்.ஐ.ஆர் கூட போடவில்லை. நீதிமன்றம் எங்களை நம்பி பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் வழக்கை எங்களிடம் ஒப்படைத்தனர். அந்த வழக்கை பதிவு செய்து ஒருவரின் கையில் கொடுக்கிறோம் ஆனால் அந்த கேஸை வாங்கியவர் 250 நாட்களாக வரவில்லை. இதில் மனஉளைச்சல் அவருக்கா? அல்லது எங்களுக்கா?, மக்களோட வரிப்பணம் என்ன?. 250 நாட்கள் பணிக்கு வராத ஒரு காவல் அதிகாரியை எப்படி மீண்டும் பணிக்கு எடுக்கலாம். என் மீது புகார் கொடுத்தவர்களை நினைத்தால் பரிதமாக இருக்கிறது. என் மீது குற்றம் சொல்லியுள்ள இந்த அதிகாரிகளின் உதவியுடன் நான் இதுவரை ஒரு சிலையை கூட கைப்பற்றவில்லை. கண்டுபிடித்த 17 சிலைகளில் ஒரு சிலைகூட இவர்கள் போர்ஸில் பிடிக்கவில்லை. அந்தந்த மாவட்ட எஸ்பிக்களிடம் நான்கு ஏஆர் கான்ஸ்டேபிள்களை கேட்பேன். நானாக என் அபிஷியல் காரில் சென்று ஒரு இடத்தில் இறங்கிக்கொள்வேன். அங்கிருந்து ஆட்டோவில் செல்வேன். என்னுடைய வெப்பனை வைத்து நானாக குற்றவாளிகளை பிடிப்போம். இது சத்தியம் சத்தியம். இதுவரை 47 குற்றவாளிகளை பிடித்துள்ளோம். இப்படி பிடிப்பட்ட குற்றவாளிகள் பிடிபட்டதுக்கு முழுக்காரணம் அந்தந்த மாவட்ட ஏஆர் கான்ஸ்டேபிள்ஸ் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள்தான். இவர்களை குறை சொல்லவில்லை இவர்களை உதவிக்குத்தான் வைத்திருந்தோம். பிடிபட்ட சிலைகளை தூக்க,ஆய்வு செய்ய உதவினார்கள். இந்த போர்ஸ் வந்த பிறகுதான் மாணிக்கவேல் சக்ஸஸாக செயல்படுகிறார் என்று கூறுகிறார்கள். இதில் சக்ஸஸ் வெற்றி என்றெல்லாம் பேச யாரும் இல்லை இது கடமை. கடைசிமூச்சு இருக்கின்ற வரைக்கும் இந்த கடமையை செய்துவிட்டு செத்துப்போவனே ஒழிய... இந்த மாதிரி புகார்கள் எதிர்பார்த்ததுதான். போலீசாக பணியாற்றுபவனுக்கு மனஉளைச்சல் என்றால் அவனுக்கு போலீசாக இருக்கவே தகுதி இல்லை. கடுமையான சூழலிலும் பணியாற்றுபவன்தான் போலீஸ்காரன் எனக்கூறினார்.

report Ponmanikavel IG Ponmanikavel Aaivu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe