Advertisment

தந்தை பெரியாருக்கு பிறந்த மண்ணில் சிறப்பு சேர்த்த இயக்கங்கள்... !

தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் விழாவையொட்டி பெரியார் பிறந்த ஈரோட்டில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் சனாதன எதிர்ப்பு பேரணி பிரமாண்ட முறையில் நடைபெற்றது. ஈரோடு கொங்கு கலையரங்கில் இருந்து தொடங்கிய இந்தப்பேரணி, பெருந்துறை ரோடு, பிரப் ரோடு வழியாக வந்து பன்னீர்செல்வம் பூங்கா வரை வந்தது.

Advertisment

பின் அங்குள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு அரசியல் கட்சியினர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இப்பேரணியில் திமுக துணை பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் செல்வராஜ், ம.தி.மு.க. எம்.பி.கணேசமூர்த்தி, தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் பெரியாரின் பேரனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில முதன்மை செயலாளர் பாவரசு, தமிழ்புலிகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் முகிலரசன், தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி துணை பொதுச்செயலாளர் வாலாசா வல்லவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisment

periyar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe