Advertisment

‘15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்’ - தமிழக அரசு அறிவிப்பு!

Special Medals for 15 Police Officers Tamil Nadu Government Announcement

Advertisment

நாட்டின் 78வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி (15.08.2024) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகப் புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும் 10 காவல் துறை அதிகாரிகள் தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் கி.புனிதா, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் து. வினோத்குமார், கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ச. சௌமியா, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஐ.சொர்ணவள்ளி, கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் காவல் ஆய்வாளர் நா. பார்வதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Special Medals for 15 Police Officers Tamil Nadu Government Announcement

Advertisment

இதே போன்று திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் காவல் ஆய்வாளர் பெ.ராதா, செங்கல்பட்டு மாவட்ட செங்கல்பட்டு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செ.புகழேந்தி கணேஷ், ஈரோடு மாவட்ட பெருந்துறை காவல் வட்ட காவல் ஆய்வாளர் இரா.தெய்வராணி, வேலூர் மாவட்ட பொன்னை காவல் நிலையம் காவல் ஆய்வாளர் ஆ. அன்பரசி, தூத்துக்குடி மாவட்ட ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நா.சுரேஷ் என மொத்தம் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகச் செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது. அதன்படி சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை காவல் துறைத் தலைவர் தா.ச. அன்பு, சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர்-I, இ.கார்த்திக், சேலம் சரக தனிப்பிரிவு குற்றப்பபுலனாய்வுத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் சி.ர.பூபதி ராஜன், சென்னை காவல் தொலைத்தொடர்பு பிரிவு காவல் ஆய்வாளர் (தொழில்நுட்பம்) க.சீனிவாசன், சென்னை அயல்பணி திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு, தலைமையகத்தின் உள்வட்ட பாதுகாப்பு பிரிவு, காவல் உதவி ஆய்வாளர் பு.வ. முபைதுல்லாஹ் என மொத்தம் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Special Medals for 15 Police Officers Tamil Nadu Government Announcement

இந்த விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூலம் மற்றொரு விழாவில் வழங்கப்படும் எனத் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

awards medals
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe