Advertisment

15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம்- தமிழக அரசு அறிவிப்பு!

tngovt

Advertisment

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டிதமிழககாவல்துறை அதிகாரிகள் 15 பேருக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச் சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. புலன் விசாரணைக்கான முதலமைச்சரின் சிறப்பு பணி பதக்கங்கள் 10 போலீசாருக்கு வழங்கப்பட உள்ளன.

சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு பொதுச் சேவைக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அம்பேத்கர், அடையாறு சிறப்பு எஸ்ஐ சிவராமன் ஆகியோருக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ பழனியாண்டி, செம்மஞ்சேரி போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ குமார் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகள் பெறும் நபருக்கு எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கம், 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட இருக்கிறது.

Award TNGovernment police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe