பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Special Instructors' Association struggle for various demands

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்றுநர்கள் சங்கம் சார்பாக இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள், பணி ஆணை வேண்டும், இ.பி.எஃப், இ.எஸ்.ஐ. ஆகியவை வேண்டும், மருத்துவ விடுப்பு வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாகப் பேசிய அச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரிடம் இது தொடர்பாக மனுக்கள் கொடுத்துள்ளோம். இன்று ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுத்துள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர், எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

teachers
இதையும் படியுங்கள்
Subscribe