Skip to main content

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதி உண்மைதான்; விசாரணை அறிக்கையில் தகவல்!!

Published on 20/01/2019 | Edited on 20/01/2019

 

Special facility for Sasikala in prison is true; Inquiry Report

 

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வசதிக்காக  சிறையில் பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், சிறையில் கூடுதல் வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்காண்டு சிறை தண்டனை பெற்றதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஷாப்பிங் பையுடன் சசிகலாவும், இளவரசியும் சிறை அறையில் இருந்து வெளியேறியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் வெளியாகின. ஆனால் சசிகலாவும், இளவரசியும் பார்வையாளர் மாடத்திற்கு உறவினரை பார்க்க சென்றதாக விளக்கம் கூறப்பட்டது. சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக டிஜிபிக்கு சிறைத்துறை டிஐஜி ரூபா அறிக்கை அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து சிறை விதிகள் மீறப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து விசாரிக்க வினய்குமார்  தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

 

விசாரணை அறிக்கையில், சசிகலாவிற்கு சலுகை அளித்தது உண்மை என்பது தெரியவந்துள்ளது. சிறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் லஞ்சம் பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விசாரணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. சிறை கட்டுப்பாடுகளில் குறைபாடுகள் இருப்பதை இந்த குழுவினர் கண்டறிந்துள்ளனர். எந்தவித உத்தரவும் பிறப்பிக்க படாமல் சசிகலாவுக்கு முதல்தரமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. சிறைக்குள் இதற்காக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்த பின்னரும் சிறப்பு சலுகைகளை வாபஸ் பெற சிறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

 

ஒவ்வொரு சிறை அறையிலும் நான்கு கைதிகள் இருக்கக் கூடிய நிலையில் சசிகலா இளவரசி ஆகியோருக்கு மட்டும் 5 தனி அறை ஒதுக்கப்பட்டு அந்த அறைகளில் திரைச்சீலைகளும் போடப்பட்டுள்ளது. பூனை தொல்லை காரணமாக திரைசீலை போடப்பட்டதாக  விளக்கமளிக்கப்பட்டது. அதேபோல் சசிகலா சமைப்பதற்காக ப்ரெஷர் குக்கர் ,மஞ்சள் உள்ளிட்டசமையல் பொருட்களும் இருந்தது விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார்.