Skip to main content

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புதொழுகைகள்!!

Published on 22/08/2018 | Edited on 22/08/2018

 

islaam

 

 

 

நாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. புத்தாடை உடுத்தி ஏழை எளிய மக்களுக்கு இறைச்சியை தானம் செய்யும் நாளாக இஸ்லாமிய சகோதரர்கள் கொண்டாடிவருகின்றனர். பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களால் சிறப்புத்தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.

 

விருதுநகர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

அதேபோல் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது அதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அரசியல் தலைவர்களும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

‘மனிதம் தாண்டி புனிதம் இல்லை’ - ஒற்றுமைக்கு அடையாளமான இஸ்லாமிய குழந்தை! 

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
  Islamic child is a symbol of unity!

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில், ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டும் ராமர் கோவில் கட்டப்பட்டு, அதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 22ம் தேதி திறந்து வைத்தார். இந்தத் திறப்பு விழாவிற்காக, கோயில் அறக்கட்டளை சார்பாக நாடு முழுவதும் இருந்து 7 ஆயிரம் முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பிற்கு நாடு முழுவதும், ஒன்றிய அரசு நிறுவனங்களுக்கு அரை நாள் விடுப்பை அறிவித்தது ஒன்றிய அரசு. அதேபோல், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், ராமர் கோவில் திறப்பு நாளான ஜனவரி 22 ஆம் தேதி அன்று குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர். 

இப்படியான ஏற்பாடுகளுடன், ஜனவரி 22ம் தேதி கோவில் கருவறையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச ஆளுநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோயில் திறப்பு விழா நடைபெற்றது. ராமர் கோயில் திறப்பைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஒரு இடத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதாகவும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

  Islamic child is a symbol of unity!

இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம், ஃபிரோசாபாத் மாவட்டத்தில் வசித்து வரும் இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்த ஃபர்சானா எனும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி வந்து அவர் ஃபிரோசாபாத் மாவட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 22ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பொறுப்பாளர் மருத்துவர் நவீன் ஜெயின், “குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்” என்று தெரிவித்தார். 

ராமர் கோயில் திறப்பு அன்று பிறந்த அந்தக் குழந்தைக்கு, அவரின் பாட்டி ஹுஸ்னா பானு, ‘ராம் ரஹிம்’ எனப் பெயர் சூட்டியுள்ளார். இது குறித்து ஹுஸ்னா பானு தெரிவிக்கையில், “இந்து - முஸ்லீம் ஒற்றுமையை பிரதிபலிக்கவே இந்தப் பெயரை சூட்டினேன்” எனத் தெரிவித்துள்ளார்.