இடமாறுதலான எஸ்.பி கோவில்களில் சிறப்புத் தரிசனம்!

Special darshan at the relocated SB Temples!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பணியிலிருக்கும் எஸ்.பி நிஷா பார்த்திபன் இன்று இடமாறுதலில் மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார். அதனால் வந்திதா பாண்டே புதுக்கோட்டை எஸ்பியாக பதவி ஏற்க உள்ளார்.

இந்தநிலையில் நிஷா பார்த்திபன் எஸ்.பி இன்று மாலை கீரமங்கலம் பகுதியில் பிரபலமாக உள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் கோயில் மற்றும் செரியலூர் கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோவில்களில் தரிசனம் செய்தார். சில மாதங்களுக்கு முன்பு தலைமைப் புலவர் நக்கீரர் உடன் 82 அடி உயரத்தில் பிரமாண்ட சிவன் சிலை கொண்ட கீரமங்கலம் மெய்நின்ற நாத சுவாமி ஆலயத்தில் தரிசனம் செய்தார். அதிகாரம் படைத்த காவல் பணியிலிருந்தாலும் அவருக்கு மனநிம்மதி தரும் கோவில்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போது சென்று தரிசனம் செய்வது அவரது வழக்கம் என்கிறார்கள்.

police Pudukottai temple
இதையும் படியுங்கள்
Subscribe