Advertisment

திமுக எம்.எல்.ஏ  உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்றம்..!

Special court releases 5 including DMK MLA

ரேசன் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏ. எம்.கே.மோகன் உள்ளிட்ட 5 பேரை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.கடந்த 2017ஆம் ஆண்டு நியாய விலை கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை தமிழக அரசு உயர்த்தியது.

Advertisment

அதனைக் கண்டித்து சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடை முன்பும் திமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், அண்ணாநகர் எம்.எல்.ஏ., எம்.கே.மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் எம்.கே.மோகன், அதியமான், ஏ.எம்.வேலாயுதம், சந்திரபாபு, செல்வம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யபட்டது.

Advertisment

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று (20.04.2021) தீர்ப்பளித்த நீதிபதி ஆலிசியா, அண்ணா நகர் எம்.எல்.ஏ. எம்.கே.மோகன் உள்ளிட்ட 5 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

anna nagar Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe