jk

Advertisment

அதிமுகவிலிருந்து புகழேந்தி நீக்கப்பட்ட வழக்கில், இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் இருவரும் 24ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்துவந்த பெங்களூருவைச் சேர்ந்த புகழேந்தியை, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டார் என்று கூறி அதிமுக தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய நீக்கத்தை எதிர்த்து புகழேந்திதொடர்ந்த வழக்கில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.