Advertisment

சரத்குமார், ராதிகா சரத்குமாருக்கு சிறைத்தண்டனை! - சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

Special Court  one year prison to Sarathkumar, Radhika Sarathkumar 

Advertisment

நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் இருவரும் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் ரேடான் மீடியா குரூப் நிறுவனம், சினிமா தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் கடந்த 2014ஆம் ஆண்டு ரூ. 2 கோடி கடன் பெற்றிருக்கிறார்கள். இதற்காக மொத்தம் 7 காசோலைகளை அளித்தனர். அதில் ஒரு காசோலை, வங்கி கணக்கில் பணமில்லாததால் திரும்பியுள்ளது.

இதையடுத்து, சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரேடான் நிறுவனம் சார்பில் 7 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், சைதாப்பேட்டை 3-வது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை,ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மொத்தம் உள்ள 7 வழக்குகளில்,சரத்குமார் மீதான ஐந்து வழக்குகளில், தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார், ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டும் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

radhika sarathkumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe