
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி, நேற்றுமுதல் (20.12.2021) பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் சிறப்பு குறைதீர் முகாம், அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட பகுதிகளில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது. திருவெறும்பூர், மருங்காபுரி, துவரங்குறிச்சி, மணப்பாறை பொத்தமேட்டுபட்டு ஆகிய பகுதிகளில் மனுக்கள் பெறப்பட்டன.
வருகிற 30ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தரவுள்ளார். அப்படி அவர் அங்கு வரும்போது இரண்டு நாட்களாக மக்களிடமிருந்து பெறப்பட்ட 40,000 மனுக்களுக்கு அவருடைய கையால் நேரடியாகப் பயனாளிகளுக்குத் தீர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.