தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் நேற்றுவரை சென்னையில் மட்டும் 22,149 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, சென்னையில் கரோனா பரவுதலைக்கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும், கரோனா பாதித்தப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

Advertisment

அந்தவகையில், சென்னை, மயிலாப்பூரின் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியான மீனம்பாள்புரத்தில் சிறப்பு மருத்துவமுகாம் அமைக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்குக் காய்ச்சல் பரிசோதனை செய்வதோடு, நோய் எதிர்ப்பு மாத்திரைகள், ஊட்டச்சத்து மாத்திரைகள், மற்றும் முகக் கவசம் ஆகியவை வழங்கப்பட்டன.