Special camp again to add name in voter list ..!

Advertisment

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜனவரி 20ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் பட்டியல் வெளியிடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 20,69,091 வாக்காளர்கள் உள்ளனர். புதியதாக இணைந்தவர்கள் 55,737 வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் விடுப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, அதற்கான படிவத்தில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்றவற்றை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.