நாளை, நாளை மறுநாள் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! - போக்குவரத்துக் கழகம்!

Special buses will run tomorrow, the day after tomorrow ... Transport Corporation announcement!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கிவரும்நிலையில், போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் 230 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் மாதவரம், கே.கே.நகர், சானிடோரியம், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேட்டிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

buses elections tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe