Advertisment

திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Special buses to Tirupati

திருப்பதி, திருமலையில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ‘பிரம்மோத்ஸவம்’ திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வாயிலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த வருடம் திருப்பதி, திருமலையில் இரண்டாவது முறையாக பிரம்மோத்ஸவம் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 13/10/2023 முதல் 26/10/2023 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Advertisment

மேற்கண்ட இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் மற்றும் பயணிகள் முழுமையாக பயன்படுத்தி பயணத்தைமேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் முன்பதிவு செய்பவர்கள் www.tnstc.in என்ற இணையதளம் மூலமும், டிஎன்எஸ்டிசி ஆப் (tnstc official app) மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Transport Andhra Tirupati bus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe