'Special buses to Thiruvannamalai'- Minister Sivasankaran informs

Advertisment

கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்அறிவித்துள்ளார்.

அதிநவீன சொகுசு பேருந்துகள், படுக்கை வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டது. மேலும் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்குச் செல்வார்கள் www.tnstc.in அல்லது tnstc app மூலம் முன்பதிவு செய்தும் அரசுப் பேருந்துகளில் பயணிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையின் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.