Advertisment

சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Special buses run to Sabarimala

Advertisment

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக சபரிமலைக்கு நவம்பர் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள், குளிர்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதியுள்ள சிறப்புப் பேருந்துகளும் கேரள மாநிலம் பம்பைக்கு இயக்கப்பட உள்ளன. சபரிமலைக்கு குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Kerala tnstc sabarimala bus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe