ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மத வழிபாட்டுத் தலங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓசூரை சேர்ந்த சசிகுமார் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் எந்த அனுமதியும் இன்றி கட்டப்பட்ட அம்மன் கோயிலில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் வயதானவர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்றுவது தொடர்பாக பலமுறை மாநகராட்சி ஆணையரிடம் புகார் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கடந்த 2005- ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Chennai_High_Court 2222222222_13.jpg)
ஆனால், உத்தரவை மீறி தற்போது கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதை அகற்ற மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதி சத்யநாராயணன் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மதவழிபாட்டு தலங்களில் சட்டவிரோதமாக கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவது தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
Follow Us