ADVERTISEMENT

'குடியரசு தின' விழாவில் பங்கேற்றேன்... தனபால் போட்ட பகீர் டுவிட்!

04:09 PM Aug 16, 2019 | suthakar@nakkh…

நாட்டின் 73-வது சுதந்திர தினம் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியைக் கொடியை ஏற்றி வைத்தார். இதே போன்று அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதேபோல் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் பழனிசாமி கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பிரிவுகளின் விருதுகளும், பரிசுகளும் வழங்கி முதலமைச்சர் பழனிசாமி சிறப்பித்தார்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

இந்நிலையில் சபாநாயகர் தனபால் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தவறான பதிவு ஒன்றை வெளியிட்டு தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். அதாவது, 'சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழக சட்டமன்ற தலைவர் தனபால் கலந்து கொண்டார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், சபாநாயகர் ஏன் குடியரசு தினத்தில் கலந்துகொண்டார்? என்று இணையதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT