/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gjdgjnfg.jpg)
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். முதலில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல்நலம் சீராக இருப்பதாகத் தெரிவித்தது. அதேபோல எஸ்.பி.பி. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவிலும், தனக்கு லேசான கரோனா தொற்றுதான் எனவும் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், அவரது உடல்நலம் குறித்து இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும், தற்போது உயிர்காக்கும் கருவிகளுடன் இருந்து வரும் அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)