கரோனாவிற்காக சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும்பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது.அமெரிக்கா இங்கிலாந்து மருத்துவர்களுடன் ஆலோசித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐ.சியூவில் உள்ள எஸ்.பி.பிக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோகருவிஉதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிகிச்சையில் உள்ள பாடகர் எஸ்.பி.பி. உடல்நலம் பெற்று திரும்பவர வேண்டும் எனத் திரையுலகினர், இசையமைப்பாளர்கள், இசைப் பிரியர்கள் என அனைவரும் கூட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.