கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நேற்று (25.09.2020) மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். இறுதிச் சடங்குகள் முடிந்தபிறகு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்.பி.பிநல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில்,அவரது ரசிகர்கள்கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/01_18.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/02_18.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/03_18.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/04_17.jpg)