Advertisment

எப்படி இருக்கிறார் எஸ்.பி.பி..? மகன் சரண் வெளியிட்ட தகவல்...

spb health update

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்த தகவலை அவரது மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்டுள்ளார்.

Advertisment

கரோனா தோற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, அவரது மகன் சரண் தினமும் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisment

அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "அப்பாவின் உடல்நிலை நேற்று இருந்தது போலத்தான் இருக்கிறது. செயற்கை சுவாசத்துக்கான வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட்டதாக ஒரு செய்தி உலவுகிறது. அது வதந்தியே. அவர் விரைவில் அதன் உதவி இல்லாமல் சுவாசிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்துச்சிகிச்சை அளித்து வருகின்றனர். மிகத் தைரியமாக உள்ளோம்; மக்களின் பிரார்த்தனை எஸ்.பி.பி.-ஐ மீட்டுக் கொண்டு வரும்" எனத் தெரிவித்துள்ளார்.

spb
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe