பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த எஸ்.பி.பி-க்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அதன்காரணமாக மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (25.09.2020) மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்.பி.பி. காலமானார். பொதுமக்கள் அஞசலிக்காக அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டது.
திருவள்ளூர் அருகே உள்ள தாமரைப்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான இடத்தில் அவரின் உடல் இன்று (26.09.2020) நல்லடக்கம் செய்யப்படும் என்று அவர் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இதற்காக நேற்று இரவு அவரது உடல் தாமரைப்பாக்கத்திற்கு எடுத்துசெல்லப்பட்டது. தாமரைப்பாக்கத்தில் அவரின் பண்ணை வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்களின் நம்பிக்கைப்படி இந்த இறுதிசடங்குகள்நடைபெற்றன, அப்போது குடும்பத்தினரும் உறவினர்களும் கலந்துக்கொண்டனர். பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/01_16.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/02_16.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/03_16.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/04_15.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/05_12.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/06_5.jpg)