Advertisment

மணல் கடத்தல்.. மடக்கிப் பிடித்த மாவட்ட எஸ்.பி..! 

SP Who caught two sand robbery

திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் பகுதியில் விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் மனைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. அந்த மனைகளில் கொட்டவும், சாலை அமைக்கவும் ராஜமங்களம் ஏரியிலிருந்து மணல் கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisment

அதன் அடிப்படையில் அரசின் அனுமதியின்றி ஆகஸ்ட் 23ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் மணல்கடத்திவந்த இரண்டு டிப்பர் லாரிகளை மடக்கி பிடித்துள்ளார். அதேபோல் மணல்அள்ளபயன்படுத்திய ஜே.சி.பி வண்டியையும் பறிமுதல் செய்துள்ளார். இந்தப் பணியில் ஈடுபட்ட இரண்டு பேரை எஸ்.பி.யின் தனிப்படை போலீசார் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Advertisment

SP Who caught two sand robbery

இவர்கள் வாகன ஓட்டுநர்கள் மட்டுமே, இதற்குப் பின்னணியில் உள்ள அரசியல், ரியல் எஸ்டேட் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

TIRUPATTUR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe